என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் மரணம்"
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் கண்ணன் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிவேல் (வயது33). இவர் காளஞ்சிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிவைராக வேலை பார்த்து வந்தார்.
வேலை முடிந்ததும் பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அத்திக்கோம்பை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்தபோது செல்வம் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென வளைவு பகுதியில் வந்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய மணிவேல் அவரது பைக் மீது மோதி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
செல்வம் காயங்களுடன் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). டிரைவர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றார். அங்கு ரெமோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். 2 குழந்தை கள் உள்ளனர்.
இந்நிலையில் மனைவியை விட்டு விட்டு தஞ்சை சென்றார். அங்கு உஷா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவரையும் விட்டு விட்டு தாராபுரம் வந்தார். இங்குள்ள நஞ்சியம் பாளையத்தில் தங்கினார். அப்போது லட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். இங்குள்ள நாடார் தெருவில் வசித்து வந்த ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் காலையில் ராஜா காயங்களுடன் ரோட்டில் மர்மமான முறையில் கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசுக்கு புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜா அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
விழுப்புரம் அருகே பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், (வயது 57), லாரி டிரைவர்.
விஸ்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் உள்ள மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்கள் ஏற்றிக் கொண்டு லாரியில் கேரளா புறப்பட்டார்.
கேரளாவில் நேற்று மதுபாட்டில்களை இறக்கி விட்டு ஊருக்கு திரும்பினார். அவரது லாரி நாகர்கோவில் நோக்கி வந்தது.
லாரி, நேற்று நள்ளிரவு நாகர்கோவிலை அடுத்த கனியாகுளம் பகுதியில் வந்த போது விஸ்வநாதனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவர், மூச்சு விட திணறினார்.
இதனால் லாரி, அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விஸ்வநாதன், டிரைவர் இருக்கையிலேயே மூச்சு, பேச்சின்றி மயங்கி கிடந்தார்.
லாரியில் இருந்த கிளீனர் இதுபற்றி அந்த வழியாக வந்தவர்களிடம் கூறினார். அவர்கள், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விஸ்வநாதனை மீட்டனர். அவரை உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு விஸ்வநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஓடும் லாரியில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தபோது அந்த வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வரவில்லை. மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்தும் இல்லை.
இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் விழுப்புரத்தில் உள்ள விஸ்வநாதனின் உறவினர்களுக்கும் அவர் இறந்து போன தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகு விஸ்வநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
முசிறி:
சேலம் புதூர்சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). இவர் பார்சல் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் சேலத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.
இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி சுடுகாட்டுத் துறை பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக தொட்டியம் அரங்கூர் கிளிஞ்சாநத்தம் நடுத்தெருவை சேர்ந்த சக்திரசேகர்(32) என்பவர் ஓட்டிச்சென்ற லாரியும், ராஜசேகர் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசேகர் இறந்தார். சந்திர சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
மதுரவாயலை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் பிரபல தனியார் கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் திருவேற்காடு பகுதியில் கொரியர் பார்சல்களை வேனில் ஏற்ற சென்றார். திருவேற்காடு காவேரி நகர் பகுதியில் சாலையோரமாக வேனை நிறுத்தி விட்டு சங்கர் இறங்க முயன்றார்.
அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி வேனின் மீது உரசியது. இதில் வேனில் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சங்கர் மின்சாரம் பாய்ந்து பலியனார்.
இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவேற்காடு பகுதியில் பல இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் செல்கின்றன. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைகன்னியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 45). டிரைவர். இவரது மகன் வினோத்குமார். இவர் கரிவலம்வந்த நல்லூர் பகுதியில் மினி பஸ் டிரைவராக உள்ளார். நேற்று பாலமுருகன் மகன் வினோத்குமாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பைக்கில் கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றார்.
பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குவளைகன்னி விலக்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக்குடன் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 45). இவர் ஆந்திர மாநில போக்குவரத்து துறையில் 15 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி (வயது 35) என்ற மனைவியும் விஷால் (வயது 9), நிவாஸ் (வயது 7) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அருணாசலம் திருமலையில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். இரவு மீண்டும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமலைக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 50 பயனிகள் இருந்தனர். பஸ் செங்குன்றத்தை அடைந்தபோது அருணாசலத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவர் சென்குன்றம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தி அங்குள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். பின்னர் பஸ் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு பஸ் ஊத்துக்கோட்டையில் சிறுது நேரம் நின்று விட்டு திருமலைக்கு புறப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிச்சாட்டூரில் அருணாசலத்துக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு சாலையோரமாக பஸ்சை நிறுத்திய அருணாசலம் அங்குள்ள மருந்து கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். அதன் பின்னர் சுமார் 100 மீட்டர் சென்றதும் பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்தார். அங்கேயே அவர் இறந்து விட்டதும் தெரியவந்தது. இறக்கும் நேரத்தில் தங்களை காப்பாற்றிய டிரைவரை பார்த்து பயணிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது குறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். பின்னர் மாற்று டிரைவர் மூலம் பயணிகள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்